08 January 2013

இந்திப்படத்தில் முதன்முதலாக அர்ஜுன்

SHARE
ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அசைக்க முடியாத ஹீரோவாக வலம் வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில படங்களையும் இயக்கியுள்ளார். தமிழில் ‘ஜெய்ஹிந்த்’, ‘கர்ணா’, ‘ஏழுமலை’ உள்ளிட்ட சில படங்களையும், தெலுங்கிலும் பல வெற்றி படங்களையும் இயக்கியுள்ளார்.


தென்னிந்திய மொழிகளில் 150 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட அர்ஜுனுக்கு இதுவரை இந்தியில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிட்டவில்லை. இந்நிலையில் தற்போது இந்தியில் ஒரு படத்தை தானே சொந்தமாக தயாரித்து, இயக்கி, நடிக்க முடிவு செய்துள்ளார். இப்படத்திற்கு ‘சி.எம்.’ என்று பெயரிட்டிருக்கிறார். ‘காமன் மேன்’ என்பதை சுருக்கி ‘சி.எம்.’ என்று வைத்திருக்கிறார். 

ஒரு சராசரி மனிதன் மக்களுக்காக உழைக்கும் போது அவன் கதாநாயகனாகிறான் என்ற கருவை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார். இந்தியில் இதுவரை எந்த படத்திலும் பார்த்திராத அளவுக்கு சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறாராம். இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் அர்ஜுன் கூறியுள்ளார்.

SHARE

Author: verified_user