13 February 2013

விண்கல்வீழ்வும்:வியப்பில் இலங்கை மக்களும்

SHARE
புவியை நோக்கி பாரிய விண்கல் ஒன்று மோதவிருப்பதாகவும், அதனால் பூமியே அழிந்துவிடும் போன்ற அச்சங்கள் கடந்த 2012 இன் இறுதியில் மக்களிடையே பேசப்பட்ட ஒரு விடயமாகும். ஆனால் தற்போது இலங்கையின் பல பகுதிகளில் விண்கல் என்று சந்தேகிக்கப்படக்கூடிய மர்மப்பொருட்கள் பல இடங்களிலும் விழுந்து வருகின்றமையானது சிலமக்களிடையே  அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.


நேற்று (12.02.2013) காலை கண்டியின் அலதெனியப் பிரதேசத்தில் வானிலிருந்து விண்கல் போன்ற மர்மப்பொருளொன்று விழுந்துள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் தம்புள்ளை பகுதியிலும் இத்தகைய மர்மப்பொருள் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



SHARE

Author: verified_user