எமது செய்திப் பரப்பிற்குட்பட்ட கிராமங்களின் வரலாறுகளை இணையத்தில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். அந்தவகையில் மாவடிவேம்பு கிராமத்தின் வரலாற்றினை மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதார திணைக்கள தெளிகருவி இயக்னரும், தவசி லேணிங் சிற்றியின் ஆலோசகருமான சி.தில்லையம்பலம் அவர்கள் எழுதி வருகின்றார்.
கடந்த 2011 இல் பசுமை சஞ்சிகையில் அவரால் எழுதப்பட்ட தொடர் 01 ஆக்கமே இதுவாகும். இத்தகைய கிராமத்தின் வரலாறுகளை, ஆலய வரலாறுகளை எமக்கு எழுதி அனுப்பினால் நிச்சயம் இங்கு பதிவேற்றப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மாவடிவேம்பு கிராமத்தின் வரலாறு
ஆக்கம்:- சி.தில்லையம்பலம்
வேத நான்மறைகளாகி விளங்கும் மும்மூர்த்தியாகிப் பூதலம் தனைப் படைத்த புன்னியன் தனைப் போற்றிப் பூமியில் நாம் புதுமை கண்டு வணங்குவோமே.
ஆங்கிலேயர்களால் இலங்கை ஆட்சி செய்யப்ப்டு வந்த காலப்பகுதியில் பெருந்தோட்டப் பயிர்களின் மூலம் வருமானம் பெற்று வந்தனர். அவற்றில் கரையோரப் பகுதிகளில் தென்னந்தோட்டங்களின் மூலம் வருமானங்களைப் பெற்று வந்தனர். 1918 ஆண்டில் ஏற்பட்ட சூறாவளியின் தாக்கத்தினால் இத்தேசத்திலிருந்த வருமானங்கள் குறைவடைந்து காணப்பட்டது. தங்களின் உதவியை நாடி நின்ற 6 குடும்பத்தினருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆங்கிலேயர்கள் காணிகளை உறுதியுடன் மாவடிவேம்பில் வழங்கி குடியேற்றினர்.
6 குடும்பத்தினரினதும் விபரம்
1. தன்னாமுனையைச் சேர்ந்த வீரக்குட்டி குடும்பம், குடும்ப அங்கத்தவாகள் 8 பேர்.
2. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வெள்ளையர் குடும்பம். குடும்ப அங்கத்தவர்கள் 5 பேர்
3. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பணிக்கர் குடும்பம், குடும்ப அங்கத்தவர்கள் 7 பேர்.
4. தன்னாமுனையைச் சேர்ந்த பரமக்குட்டி குடும்பம், குடும்ப அங்கத்தவர்கள் 4 பேர்.
5. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சத்துருக்கர் குடும்பம், குடும்ப அங்கத்தவர்கள் 3 பேர்.
6. களுவன்கேணியைச் சேர்ந்த கதிர்காமன் குடும்பம், குடும்ப அங்கத்தவர்கள் எண்ணிக்கை 4 பேர்.
இந்த 6 குடும்பத்தினருக்கும், ஒவ்வொரு துண்டுக் காணியை வழங்கியதுடன், 1928 இல் அக்காணிகளுக்கு ஆங்கிலேயரால் உறுதிப்பத்திமும் வழங்கப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு பல ஆலோசனைகளையும் கூறி இக்கிராமத்தின் பொறுப்பு தங்களிடம் தான் தங்கியுள்ளது என்று கூறிச் சென்றார்.
தோட்டவேலை செய்து தனது சீவியத்தை நடாத்திக் கொண்டு வரும்போது ஏற்பட்ட சூறாவளியின் தாக்கத்தினால், தங்களின் சீவியத்திற்கு ஏதாவது தொழில் ஒன்று தேவையாக இருந்தது.
இவ் ஆறு குடும்பங்களில் ஒன்றான பனிக்கருக்கு பிரம்புக் கைத்தொழில் தெரியும் என்பதால் பிரம்புக் கைத்தொழிலை சீவிய காலம் வரை வாழ்வதற்கு உதவியாகும் என தொழிலைத் தொடங்குகின்றனர். அத்தொழிலை இன்றுவரைக்கும் செய்து வருகின்றனர்.
அத்துடன் விவசாயம், மற்றும் ஏணைய தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சில தேவைகள் தங்களின் வாழ்க்கைக்கு தேடவேண்டியுள்ளதால் நாம் முதலில் ஒரு வணக்கஸ்தலத்தை அமைப்பது பற்றி வீரக்குட்டி என்பவரால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்னும் எண்ணத்துடன், ஆலமரத்தடியில் பிள்ளையார் வீற்றிருக்கும் இடம் என்பதால் இவ் இடத்தில் ஆலயம் அமைப்போம் என வீரக்குட்டி அவர்கள் கூறினார். சிறு பிள்ளையார் கல் என ஒன்றைத் தெரிவு செய்து கொண்டு வந்து அவ் ஆலமரத்தடியில் சிறு கூடாரம் அமைத்து முதல் பூஜையையும் ஆறு குடும்பங்களும் சேர்ந்து ஆரம்பித்து வைத்தனர்.
காலம் பல கடந்து மக்களின் தொகையும் அதிகரித்து வரும்போது சிறி கும்பத்துமாரி அம்மன் ஆலயம் அமைப்பதாக தீர்மானித்தனர். இந்தத் தீர்மானத்திற்கு அமைவாக அவ் ஆலயத்தையும் அமைத்தனர். அதன் பின் மக்களின் மனங்களில் மங்கா வரம் கொடுக்கும் மருங்கையடிப் பிள்ளையர் என எண்ணிய எண்ணத்துடன் பிரதான வீதியில் மருங்கை மரத்தடியில் ஒரு சிறு கல்லை வைத்து மருங்கையடிப் பிள்ளையார் எனக் கூறியதுடன், சிறு குடிசை அமைத்து வழிபட்டு வந்தனர். அதுதான் மருங்கையடிப் பிள்ளையார் என அழைக்கப்பட்டு வருகின்றது.
இதைத் தொடர்ந்து சில காலத்தின் பின் கமலகன்னி எனும் நாமத்துடன் ஒரு குடும்பத்தால் அமைக்கப்பட்டது. நடைமுறையில் மருங்கையடிப் பிள்ளையார் ஆலயமும், விரும்பியவர்கள் தங்களின் இயல்புக்கு ஏற்ற வகையில் பூசைiயை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். இக்கோவிலுக்கு இக் கிராமத்தை வெளி இடங்களில் இருந்தும் அடியார்கள் விசேடமாக மாட்டுவண்டில் மூலம் வருகை தந்தனர்.
இன்றைய நிலையில் நித்திய பூசைகளும், விசேடமான முறையில் கிரக சாந்தி வழிபாடுகளும் , திருவிழாக்களும், சிறப்பாக நடைபெற்று வருவதும் இங்கு சிறந்து விளங்குகின்றது. மேலும் ஒரு பிள்ளையார் கோவிலும் அமைத்து வழிபாடுகள் நடப்பதுடன், நாகபூசனி அம்மன், பத்திரகாளி அம்மன் போன்ற ஆலயங்களும் பக்தாகட்கு தீராத நோய் அகற்றி அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றன.

( தொடரும்....)
Mavadivembu -02 map (Created By :- B.S. AKSHAYAN)