17 March 2013

மாவடிவேம்பு-01 கிராமசேவையாளர் முதலிடம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கு இடையேயான அலுவலக முகாமைத்துவப் போட்டியில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு-01 கிராமசேவையாளர்  முதலிடம் பெற்றுள்ளார்.


இலங்கையில் வருடாவருடம் நடத்தப்படும் கிராம உத்தியோகத்தர்களுக்கு இடையேயான அலுவலக முகாமைத்துவப் போட்டியில் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாவடிவேம்பு-01 கிரமசேவையாளர் திரு.தி.லிங்கேஸ்வரன் அவர்கள் முதலிடம் பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.

ஏற்கனவே ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 39 கிராமசேவையாளர் காரியாலயங்களுக்கு இடையே நடைபெற்ற பிரதேச மட்டத்திலான போட்டியில் முதலாமிடம் பெற்று மாவட்ட மட்டத்திற்கு தெரிவாகியிருந்த கிராமசேவையாளர் திரு.தி.லிங்கேஸ்வரன் அவர்களின் மாவடிவேம்பு-01 கிராமசேவையாளர் காரியாலயம் தற்போது மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற போட்டியிலும் முதலாமிடம் பெற்றுள்ளது.






SHARE

Author: verified_user