29 May 2013

லாவாணையில் யானை தாக்கி மரணம்

SHARE
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவு, லாவாணை எனுமிடத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இழக்காகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.


ஈரலக்குளம் - ஆவட்டியாவெளி கிராமத்தை சேர்ந்த சிவசம்பு சின்னவன்  (63 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக விரட்டிக்கொண்டு காட்டு வழியாகச் சென்றபோது யானையின் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியாசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.




SHARE

Author: verified_user