எமது இணையத்தளமானது சித்தாண்டி மற்றும் சூழவுள்ள கிராமங்களின் செய்திகளை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளமானது சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, செங்கலடி, கொம்மாதுறை, சந்திவெளி, கிரான், கோரகல்லிமடு, வாழைச்சேனை மற்றும் விளைநிலப் பகுதிகளை கொண்ட கரடியனாறு, வேப்பவட்டுவான், ஈரலக்குளம், பெரியவட்டுவான், தரவை, குடும்பிமலை, பெருமாவெளி முதலிய பகுதிகளையும் தமது செய்தித் தளப்பகுதியாகக் கொண்டுள்ளது.
கிராமத்தின் நிகழ்வுகளை வெளிஉலகிற்கு எடுத்துசெல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த இணையத்தளத்தினை நான் இயக்கி வருகின்றேன். ஒருவருடைய முயற்சியில் மாத்திரம் ஒரு காரியம் வெற்றி பெமுடியாது என்பது தாங்களறிந்த விடயம். எனவே கிராமங்களை வெளிஉலகிற்கு தெரியப்படுத்தும் எனது நோக்கத்திற்கு இதனை வாசிக்கின்ற நீங்களும் உங்களால் முடிந்தால் உதவமுடியும்.
செய்திகளை வழங்குவதன் மூலம் இந்த இணையத்தளத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவி செய்யலாம். நீங்கள் வசிப்பது எமது செய்தித் தள பிரதேசத்திற்குட்பட்ட பகுதியாக இருக்குமானால் உங்களது பிரதேசத்தில் உள்ள செய்திகளை எமக்கு நீங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம்.
பாடசாலை நிகழ்வுகள், ஆலய நிகழ்வுகள், விவசாய நடவடிக்கை சார்ந்த நிகழ்வுகள், பொது அமைப்புக்களின் நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் முதலிய செய்திகளை நீங்கள் அனுப்பி வைக்கலாம்.
தற்போதும் எமது இணையத்தளத்திற்கு பிருந்தன், உதயன், செல்வா போன்றவர்கள் செய்திகளை வழங்கி உதவி வருகின்றார்கள். அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிப்பதுடன், தொடர்ந்தும் ஏணையவர்களினதும் செய்திகளை எதிர்பார்க்கின்றோம்.
Admin:- B.S. Akshayan
Email:- akshayansm@gmail.com

