16 May 2013

கிரான் பொதுச்சந்தை திறந்துவைப்பு

SHARE
முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக கிரான் பொதுச் சந்தை கட்டிடத் தொகுதி புணரமைக்கப்பட்டு நேற்று (15.05.2013) மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வு கோறளைப்பற்று –வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சிஹாப்டீன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தன்;, பிரதி அமைச்சர் முரளிதரன்  உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சத்தியானந்தி, முன்னாள் தவிசாளர் உதயஜீவதாஸ்,பிரதி தவிசாளர் புவிதரன் மற்றும் கிராம சேவையாளர் உட்பட கிரான் பிரதேசத்தின் முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.
குறித்த சந்தை கட்டிடத் தொகுதியானது புறநெகும அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுமார் 100 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






 
SHARE

Author: verified_user