குறிப்பிட்ட முதியவர் பல தடவைகள் இவ்வாறு தொலைந்து மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஆனால் கடந்த 5 நாட்களாக வீட்டை விட்டுச் சென்ற முதியவர் கோறளங்கேணி காட்டுப் பகுதியினுள் காயான் பற்றைகளால் படுக்கை அமைத்து அங்கே படுத்துறங்கியுள்ளார். இந்த நிலையில் அங்கிருந்தபடியே அவரது உயிர் பிரிந்துள்ளது.
பொலிசுக்கு கிடைத்த முறைப்பாட்டினடிப்படையில் சென்று பார்த்தபோது உடலானது மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதுடன், நேற்று (24.05.2013) மாலையே அடக்கம் செய்யப்பட்டது.
