மட்டக்களப்பு- வாழைச்சேனை கல்குடா வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளார்.வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் கணித பாடம் கற்பிக்கும் சிவநேசன் கேமராஜன் (வயது 30) என்பவரே இவ்வாறு ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். அவரோடு இப்பாடசாலையில் சிற்றூழியராக கடமையாற்றும் மார்கண்டு அகிலன் (வயது 30) என்பவரும் படுகாயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனை நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து பேருந்தும், இந்துக்கல்லூரியின் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், ஆட்டோ செலுத்தி வந்த ஊழியரும் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இறந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது, படுகாயமடைந்தவரை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாடசாலையின் மின்சாரம் இல்லாமை காரணமாக உயர்தர மாணவர்களின் கண்காட்சியை நடாத்துவதற்காக, மின்சாரம் தேவையாக உள்ளதானால் மின்பிறப்பாக்கி எடுத்து வரும் போது இவ்விபத்து நேர்ந்துள்ளது.
பேருந்தின் சாரதியை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்து, வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





