21 June 2013

வேர்ள்ட்விசன் நிறுவனத்தால் மாணவர்களுக்காக சிறுதோட்டம்

SHARE
சித்தாண்டி 01 வினாயாகர் கிராமத்தில் அமைந்துள்ள அலைமகள் பாலர் பாடசாலை வளாகத்தினுள் கல்வி பயிலும் பாலர் பாடசாலை மாணவர்களது மதிய உணவுத் திட்டத்திற்கு உதவியளிக்கும் வகையில்  வேர்ட்விசன் நிறுவனத்தினரால் ஒருதொகை பயிர்க்கன்றுகள்  இன்று(21.06.2013)  காலை வழங்கி நடப்பட்டன. அத்துடன் பொதுமக்களுக்கு பயிர்நடுதல் தொடர்பான போதிய விளக்கமும் வேர்ள்ட்விசன் நிறுவனத்தினரால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன், வேர்ள்ட்விசன் நிறுவன அதிகாரிகள், பத்திரகாளி அம்மன் ஆலய செயலாளர் க.புவிதரன் மற்றும் பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.
(பிருந்தன்)





SHARE

Author: verified_user