10 June 2013

புவியின் அமைப்பு - நூல் வெளியீடு

SHARE
தவசி லேணிங் சிற்றியின் தலைமை ஆசிரியர் வி.எஸ். அக்சயன் அவர்களினால் எழுதப்பட்ட புவியின் அமைப்பு (பௌதிகப் புவியியல்) எனும் நூல் நேற்று (09.06.2013) வெளியிடப்பட்டது.  

தவசி லேணிங் சிற்றி படிப்பகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வினை நூலாசிரியரும், கல்வி நிலைய தலைமையாசிரியருமான அக்சயன் அவர்கள் தலைமையேற்று நடாத்தியிருந்தார்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. க.சூரியகுமாரன் அவர்களும், சிறப்பு அதிதியாக சித்தாண்டி நலன்புரி அமைப்பின் தலைவர் திரு. ஆ.தேவராசா அவர்களும், கௌரவ அதிதிகளாக ஏறாவூர் தாதியர் பரிபாலகர் திரு. சி.புவீந்திரன் அவர்களும், செங்கலடி மத்திய கல்லூரி ஆசிரியை திருமதி ஜெயசக்தி புவீந்திரன் அவர்களும், கல்வி நிலைய திட்டமிடலாளர் திரு. க.சிவா, கல்வி நிலைய சமூக இணைப்பாளர் மா.தீபன் அவர்களும் கலந்துகொண்டார்கள். 

புவியின் அமைப்பு எனும் இந்நூல் க.பொ.த. உயர்தர மாணவர்களின் புவியியல் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
























SHARE

Author: verified_user