இறுதிநாள் நிகழ்வை முன்னிட்டு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகரும், மாகாண சபை உறுப்பினருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களும், சித்தாண்டி விஸ்வகுல விழாக்குழுவினரும் இணைந்து மாபெரும் அன்னதான நிகழ்வொன்றினை நடாத்தியிருந்தார்கள்.
வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் ஆலயத்தின் 50 வருட தொண்டரும், ஆலய நிருவாக சபை ஆரம்பகட்ட உறுப்பினருமாகிய சம்புஅப்பா என அழைக்கப்படும் சிவசம்பு என்பவர் முன்னாள் முதல்வரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், முதலாவது அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது.
