15 September 2013

க.பொ.த (சா/த) அடைவினை அதிகரிக்கும் செயற்திட்டம்

SHARE
கல்விப் பொதுத் தராதர (சாதாரண) தரப் பரீட்சையில் பாடசாலைகளின் அடைவினை மேம்படுத்துவது தொடர்பாக கல்குடா கல்வி வலயத்தினால் மேற்கொள்ளும் விசேட செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக பிரதான பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கூட்டத்தொடர் 09.09.2013 இல் இருந்து நடைபெறுகின்றது. 


முதலாவது கூட்டமானது வரலாறு, தமிழ் பாடத்தினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாகாணக்கல்விப் பணிப்பாளர் திரு எம்.டி.ஏ. நிசாம் அவர்களும் கலந்து கொண்டார். தொடர்ந்து மற்றை பாடங்களுக்கான கூட்டங்கள் 10.09.2013, 11.09.2013 ஆகிய தினங்களில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் விடுமுறை காலத்தில் நடைபெற்ற வகுப்புக்கள் தொடர்பாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படும். அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் தலைமையில் உதவிக்கல்விப்பணிப்பாளர்களும் இணைந்து இந்த கூட்டத்தொடரினை நடாத்துகின்றனர்.




 (http://www.kalkudahzone.sch.lk)

SHARE

Author: verified_user