06 September 2013

பேய்விரட்டியவர் பரிதாப மரணம்

SHARE
இலங்கையின் மஹரகம பிரதேசத்தில் பேய் விரட்டிய 32 வயதான ஆங்கில ஆசிரியர் ஒருவர், பேய் ஒட்டும் போது உயிரிழந்துள்ளார்.


கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த மக்ஸி காஸ்ரோ என்ற ஆங்கில ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியர் மனநோயாளிக்கும் சிகிச்சை அளித்து வந்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

பேய் விரட்டும் நடவடிக்கைக்காக குறித்த ஆசிரியர் ஆழமான குழி ஒன்றை வெட்டி, அதில் தாம் சென்ற பின்னர் குழியை மூடியால் மூடிவிடுமாறும், பின்னர் இரண்டரை மணிநேரத்திற்குப் பின்னர் கத்தியொன்றைப் பயன்படுத்தி தான் சைகை காட்டிய பின் குழியைத் திறக்குமாறு கூறியுள்ளார்.

எனினும் பேய் ஓட்ட சென்ற குறித்த ஆசிரியர் மூன்ற நேரமாகியும் குழியில் இருந்து எந்த சைகையையு;ம் காட்டாமையால் அவரது உதவியாளர் குழியை திறந்து பார்த்த போது ஆசிரியர் உயிரிந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


SHARE

Author: verified_user