18 September 2013

பாலையடித்தோணாவில் கிரான் பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை

SHARE
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகமானது பிரதேச செயலாளர் திரு K.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில பிரதேச செயலகத்திலிருந்து அதிக தொலைவில் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு காணும் முகமாக பிரதேச செயலத்தில் உள்ள சகல பிரிவு உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கிய ஒரு குழு குறிப்பிட்ட கிராமத்திற்கு களவிஜயம் மேற்கொண்டு மக்களது பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்கிவருகின்றது.


அந்த வகையில் 12.09.2013 அன்று பாலையடித்தோணா கிராம உததியோகத்தர் பிரிவில் உள்ள ஜீவபுரத்தில் அமைந்துள்ள பொதுக்கட்டிடத்தில் இந்நிகழ்வு பிரதேச செயலாளர் திரு K.தனபாலசுந்தரம அவர்களின் தலைமையில் காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. T. கௌரீஸ்வரன்,சமுர்த்தி முகாமையாளர் திரு.M. கலாதேவன், சமூகசேவை உத்தியோகத்தர்  திரு A. சபேசன். குடியேற்ற உத்தியோகத்தர் S.நிமலநாதன்,கிராம உத்தியோகத்தர் திரு.L.R.S. றாகல் உட்பட பதிவாளர் பிரிவு, காணிப்பிரிவு,சமூக சேவை பிரிவு,அடையாள அட்டை பிரிவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விவசாய பிரிவு,சமுர்த்தி ,சிறுகைத்தொழில் கலாசார மற்றும் இந்து கலாசார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். மக்கள் புதிதாக தருமணப் பதிவுகள் , காணி அனுமதிப் பத்திரங்கள் என்பன உடனடியாக வழங்கப்பட்டதுடன்; புதிய சமுர்த்தி அட்டை மற்றும் ஏனைய பிரச்சனைகளுக்கம் மக்களிற்கு உடனடியாக தரவுகளும் ஆலோசனைகளும் மக்களிற்கு வழங்கப்பட்டது.


இல       பிரிவு  தீர்க்கப்பட்ட பிரச்சனைகள்
01
காணி
150
02
சமூக சேவை
20
03
அடையாள அட்டை
22
04
பதிவாளர்
34
05
வெளிநாடு
05
06
விவசாயம்
01
07
சமுர்த்தி
53
08
சிறுகைத்தொழில்
09
09
இந்து கலாச்சாரம்
01
(மு.கிருஸ்ணகுமார்)









SHARE

Author: verified_user