சித்தாண்டி பிரதேசத்தில் இன்றைய தினம் யானை தாக்கியதில் சித்தாண்டியைச் சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளனர். இன்று காலையில் சித்தாண்டி - உதயன்மூலையைச் சேர்ந்த ஓர் இளைஞனையும், மாலைவேளையில் சித்தாண்டி -03 ஐச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரையும் தாக்கியுள்ளது.
இன்று பிற்பகல் வனவிலங்கு அதிகாரிகளுடன் யானைவெடிமூலம் யானைகளைக் கலைத்துச்சென்று கொண்டிருந்த வேளையிலேயே சித்தாண்டி -03 ஐச் சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இரண்டு குட்டிகளுடன் மொத்தமாக ஆறு யானைகள் சித்தாண்டி நாகதம்பிரான் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் தற்போதும் தங்கியுள்ளதாக குறிப்பிட்ட பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.
(தசாங்கன்)

