06 September 2013

சித்தாண்டியில் குவிந்துள்ள யானைகள்: அச்சத்தில் மக்கள்

SHARE
சித்தாண்டிப் பிரசேத்தில் இன்று காலையிலிருந்து யானையின் அட்டகாசம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சித்தாண்டியின் நாகதம்பிரான் ஆலயப் பகுதியில் சுமார் 5 யானைகள் வந்து தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


 யானைகளைப் பார்ப்பதற்கு பெருமளவிலான மக்கள் திரண்டிருப்பதுடன், யானைகள் அவ்விடத்திலிருந்து அசையாமலே தற்போதும் உள்ளன. பொலிசார் மற்றும் கிராம சேவகர்கள் குறிப்பிட்ட பகுதியில் வருகைதந்துள்ளதுடன், வனவளத்தினைக்களத்தினருக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் யானைகள் சந்தணமடுஆறு, புளியடி ஆகிய பகுதிகளுக்கே வந்து சென்றன. ஆனால் தற்போது சித்தாண்டி 04 மக்கள் குடியிருப்புப் பகுதிக்கே வந்துள்ளமையினால் பெருமளவில் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

சித்தாண்டி மக்கள் பொதுவாக வெள்ள அனர்த்தத்தினால் வருடாவருடம் பாதிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை தற்போது உயிரியல் அனர்த்தமான யானைகளின் அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது மிகவும் கவலைக்கிடமானது என சித்தாண்டி 01 கிராமஉத்தியோகத்தர் பூ.அருள்நாதன் அவர்கள்   எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். 



SHARE

Author: verified_user