13 December 2013

விஜயகாந்தின் மகன் அறிமுகமாகும் பட பூஜை

SHARE
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் என்ற படம் மூலம் கதா நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை சந்தோஷ்குமார் ராஜன் இயக்குகிறார்.


இரு வருடங்களாக நடிப்பு பயிற்சி, நடனம், சண்டை பயிற்சிகள் பெற்று சண்முகபாண்டியன், இப் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடக்க விழா பூஜை சாலி கிராமத்தில் இன்று காலை நடந்தது. இதில் விஜயகாந்த், எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர். நடிகர்கள் பிரபு, சத்யராஜ், கார்த்தி, நந்தா, மயில்சாமி, விக்ரம் பிரபு, இளவரசு, கருணாஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

டைரக்டர்கள் எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.எஸ். ரவிக் குமார், பூபதிபாண்டியன், தயாரிப்பாளர்கள் முரளி தரன், சாமிநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். தே.மு.தி.க.எம்.எல்.ஏ. அனகை முருகேசன், மாவட்ட செயலாளர்கள் வி.யுவராஜ், வி.என். ராஜன், ஏ.எம். காம ராஜ், க.செந்தாமரை கண் ணன், மற்றும் கே.எஸ். மலர்மன்னன், எஸ்.யு.சந் திரன், சவுந்திரபாண்டியன், த.பாண்டியன், கண்ணதாசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.




SHARE

Author: verified_user