09 January 2014

சித்தாண்டியில் பட்டப்பகலில் கொள்ளை

SHARE
(Sasi) சித்தாண்டி பிரதேசத்தில் இன்று (09.01.2013) பகல்வேளையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10 மணியளவில் சித்தாண்டி -04  பலநோக்கு  கட்டடத்திற்கு (R.D.S வீதி) அருகாமையிலுள்ள பூமணி என்பவரின் வீட்டிலேயே  இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலுள்ளவர்கள் இன்று  வியாழக்கிழமை சித்தாண்டி சந்தைக்காக தமது வீட்டினைப் பூட்டிவிட்டு சென்று திரும்பியவேளையில் சுமார் ரூபாய் 20000 பெறுமதியான பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 திருட்டுச் செயல்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்து வருகின்றமை தொடர்பாக ஆலயங்கள் மூலமும், பிரசாரங்கள் மூலமும்  தொடர்ச்சியாக பொலிசார் மக்களிடையே விழிப்புணர்வூட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 





SHARE

Author: verified_user