09 March 2014

வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டி

SHARE
(Sanjeevan&Thanu) மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்ப்ட்ட மட்/ வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயத்தில் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு திறன் கானும்  இல்லவிளையாட்டுப் போட்டி இன்று (08.03.2014) வித்தியாலயத்தின் அதிபர் திரு.எஸ்.மோகன் தலைமையில் வந்தாறுமூலை கணேச வித்தியலய மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்வானது அதிதிகளை வரவேற்றலுடன் ஆரம்பித்து. ஒலிம்பிக் சுடரினை கல்குடா கல்வி வலய உடற்கல்விப் பணிப்பாளர் திரு.எஜ்.சுபாஜ்சந்திரன் ஏற்றிவைத்ததை தொடர்ந்து விளையாட்டுக்கள் நடைபெற்றன. மாணவர்களின் மெய்வலுனர்  திறனாய்வு நிகழ்வுகளும், அணிநடை, உடற்பயிச்சி கண்காட்சி பழையமாணவர்களுக்கான விளையாட்டுக்கள் மற்றும் பெற்றோருக்கான போட்டிகளும் தொடர்ந்து இடம் பெற்றன.

இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதி கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.குலேந்திரகுமார்  கௌரவ அதிதி மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி பீடாதிபதி திரு.எஸ்.இராஜேந்திரன் அசிறப்பு அதிதி கல்குடா கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.என்.நவரெத்தினம் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இன்நிகழ்வில் முதலிடத்தை இளங்கோ இல்லம் தட்டிக்கொண்டது. இல்லங்களுக்கடையில் திறமைகளை வெளிக்காட்டி வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்குரிய பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கேயங்கள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன. 


































SHARE

Author: verified_user