
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமியத் தெய்வ வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்ற இடமாக கோராவளி அமைந்துள்ளது. மருதமும் , குறிஞ்சியும் ஒருங்கே அமையப் பெற்ற இக்கிராமத்தில் கோயில் கொண்டுள்ள கோராவளி கண்ணகி அம்மனுக்கு எதிர்வரும் 11.06.2014 அன்று புதன் கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 12.06.2014 வியாழக்கிழமை அன்று திருக்குளிர்த்தி பாடுதலுடன் நிறைவு பெறவுள்ளது.
உற்சவ காலத்தில் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகமும், இப்பிரதேச பண்ணையாளர் சங்கமும் இணைந்து தாக சாந்தி வழங்கவுள்ளதுடன், ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்களுக்காக போக்குவரத்து ஒழுங்கமைப்பும் செய்யப்பட்டுள்ளது.
கோராவளி கண்ணகை அம்மன் பாடல்