(Sanjee) வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் உள்ள கடை ஒன்று இன்று மாலை 6. 30 மணியளவில் இனம் தெரியாதோரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இனம் தெரியாத இரு நபர்கள் கடையினுள் புகுந்து உரிமையாளரை அச்சுறுத்தி ரூபாய் 70 ஆயிரம் பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
