02 June 2014

சித்தாண்டியில் குடிநீர் இணைப்புக்கள் வழங்கும் திட்டம்

SHARE
மட்டக்களப்பு சித்தாண்டி கிராமத்தில் அங்குள்ள மக்கள் சுத்தமான குடிநீரை பெறும் பொருட்டு "வொறன்டீனா" நிறுவனத்தின் நிதி உதவியுடன் பாம் பௌண்டேசன் நிறுவனத்தினால் சித்தாண்டி 1ம் பிரிவு,2ம் பிரிவு மற்றும் 3ம் பிரிவு ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுவருகின்றது.

பாம் பௌண்டேசன் நிறுவனத்தினால் இக் கிராமத்தில் ஆயிரம் குடும்பங்களுக்கு இணைப்புகள் வழங்கப்படவுள்ளதாவும். மேலும், சித்தாண்டி 4ம் பிரிவுக்கு உலக தரிசனம் (வேள்ட்விஷன்) நிறுவனத்தினால் 300 குடும்பங்களுக்கு இணைப்புகள் வழங்கப்படவுள்ளதகவும் அறியமுடிகின்றது.

கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட  இத்திட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் சித்தாண்டி -1,2,3 பிரிவுகளில் முழுமையாக "வொறன்டீனா" நிறுவனத்தின் உதவியுடன் "பாம் பௌண்டேசன்"  நிறுவனமே இத் திட்டத்தினை செயற்படுத்திவருகின்றது. என பாம் பௌண்டேசன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user