மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தினை உலுக்கிய இரட்டைக்கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களில் பிரதானசந்தேகநபர்தவிர்ந்த ஏனையமூவரும் மேல்நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2013-04-07ஆம் திகதி செங்கலடி –பதுளைவீதியில் உள்ளவீட்டில் வைத்துகணவன்-மனைவி இருவர் கோரமாககொலைசெய்யப்பட்டிருந்தனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதுகுறித்த தம்பதியரின் மகள்உட்படநான்குபேர்ஏறாவூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இதுதொடர்பிலான வழங்குகள் ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் நடத்தப்பட்டு வந்தஅதேவேளை, பிணைகோரப்பட்ட வழக்குமட்டக்களப்பு மேல்நீதிமன்றிலும் தொடரப்பட்டது.
இந்தநிலையில் இந்தவழக்குஇன்றுதிங்கட்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொண்ட போது, இரண்டாம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி பிரியந்தியும் மூன்றாம் நான்காம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி பிரேம்நாத்தும் ஆஜராகியிருந்தனர்.
இந்தவழக்கினை மேல்நீதிமன்ற நீதிபதி திருமதி சந்திரமணி விஸ்வலிங்ம் விசாரணை செய்தார்.
இதன்போது இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் பின்னர் முதலாம் எதிரிதவிர்ந்த ஏனையமூவரையும் பிணையில் செல்லசிலநிபந்தனைகளுடன் நீதிபதி அனுமதிவழங்கியதாக சட்டத்தரணி பிரேம்நாத் தெரிவித்தார்.
இரண்டாம் எதிரி75 ஆயிரம்ரூபாகாசுப்பிணையும் 50லட்சம்ரூபாசரீரப்பிணையிலும் மூன்றாம் நான்காம் எதிரிகள் 50ஆயிரம்ரூபாகாசுப்பிணையிலும் 10லட்சம்ரூபாசரீரப்பிணையிலும் செல்லஅனுமதியளித்தார்.
அத்துடன் மூவரும் வெளிநாடு செல்வதற்கான தடைகள்விதிக்கப்பட்டுள்ளதுடன், திங்கள் மற்றும் வியாழன் ஆகியதினங்களில் பொலிஸ்நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் எனவும்நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
செங்கலடி கொலை தொடர்பான முன்னைய செய்திகள்:-


