05 June 2014

செங்கலடி ஐயங்கேணி தமிழ் வித்தியாலயம் சாதனை

SHARE
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் இடம்பெற்ற டேபிள் டென்னிஸ் போட்டிகளில் மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள மிகப் பின்தங்கிய பாடசாலையான செங்கலடி ஐயங்கேணி தமிழ் வித்தியாலயம் நான்கு இடங்களிலும் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள மிகப் பின்தங்கிய பாடசாலையான ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்தில் இதுவரை சொந்தமாக டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கான ஒரு மேசை கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான டேபிள் டென்னிஸ் சம்பியன் போட்டியில் 19 வயதிற்கிடைப்பட்ட ஆண்கள் பெண்கள் பிரிவு மற்றும் 15 வயதிற்கிடைப்பட்ட ஆண்கள் பெண்கள் பிரிவுகள் ஆகிய நான்கு பிரிவுகளிலும் ஐயங்கேணி தமிழ் வித்தியாலயம் சம்பியன் இடத்தைப் பெற்றுக் கொண்டது. 
 இந்தப் பாடசாலை 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண மட்டத்தில் 2 சம்பியன்களையும், 2013 ஆம் ஆண்டு 3 சம்பியன்களுக்கான விருதுகளையும், 2014 ஆம் ஆண்டு 4 சம்பியன்களையும் தனதாக்கி சரித்திரம் படைத்துள்ளது. சென்ற ஆண்டு தேசிய மட்டத்தில் 15 வயதிற்குட்பட்டோருக்கிடையில் இடம்பெற்ற சதுரங்கம் (chess) போட்டிகளில் ஐயங்கேணி தமிழ் வித்தியாலய மாணவி கே. நிஸாந்தினி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 
 
SHARE

Author: verified_user