பொதுவாக தரைத்தோற்ற பாகுபாட்டின் அடிப்படையில் 300 மீற்றர் உயரத்தி;குமேற்பட்ட பகுதிகள் மலைகள் எனவும், அவற்றை விட உயரங்குறைந்த பகுதிகள் குன்றுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மலை என்ற வரையறைக்குள் ஒரு சில அம்சங்களே காணப்படுகின்றன. குறிப்பாக தமிழ் மக்களின் மந்தைமேய்ச்சல் நிலமான மாதவணை எனும் இடத்திலிருந்து 3 கிலோமீற்றர் தென்மேற்காக அமைந்திருக்கும் லிண்டகல எனப்படும் மலையே 389.4 மீற்றர் எனப்படும அதியுயர் உயரத்தைக் கொண்ட மலையாகும்.
பாறையால் அமைந்த உயரமான அனைத்து பகுதிகளையும் மக்கள் மலை என்றே அழைத்து வருவது வழக்கம். சான்றாக சுமார் 150 மீற்றருக்கு இடைப்பட்ட குடும்பிமலை குன்றினை மக்கள் குடும்பிமலை என்றே அழைக்கின்றனர். மிகவும் உயரம் குறைந்த சிதைவடைந்த பாறைப்பகுதிகளை வெளியரும்பு பாகைள் என புவியியல் ரீதியாக அழைக்கப்படுகின்றன. குறிப்பாக சித்தாண்டி சந்தணமடு ஆற்றிற்கு மறுதிசையில் அமைந்துள்ள சிறுதேன்கல் எனப்படும் மலைப்பகுதி போன்றவற்றை எடுத்தக்காட்டாகக் குறிப்பிடலாம்.
கடைசிமலை என அழைக்கப்படுகின்ற சிறிய பாறைப்பகுதியும் வெளியரும்புப் பாறை என்றே இலங்கை நிலவளவைத் திணைக்களத் தேசப்படத்தில் குறிக்கப்பட்டுள்ளது. ஈரலக்குளம் கிராமசேவகர் பிரிவினுள் முள்ளிவட்டவான் குளத்திலிருந்து கிழக்காக 2 கிலோமீற்றர் தொலைவில் இந்த கடைசிமலை அமைந்துள்ளது. தமிழர்களின் விவசாய நிலங்கள், உறைவிடங்களைச் சூழவுள்ள இந்தப் பகுதியானது எமது பிரதேசத்தின் இயற்கை அழகு உள்ள பிரதேசங்களுள் ஒன்றாகும். மலைகளைப் பார்ப்பதற்கு என்று நாம் மத்திய மலைநாடு பகுதிகளுக்கு சுற்றுலா செல்கின்றோம். அதேபோன்று எமது தாய்நிலத்தில் உள்ள இந்தக் கடைசிமலையை நாம் ஒரு தடவை இயற்கையை ரசிக்கும் நோக்குடன் சென்று பார்க்கும் எண்ணம் மேலோங்க வேண்டும். உண்மையில் மத்திய மலைநாடடில் உள்ளதைப்போன்று ஏணைய அம்சங்களை எமது மண்ணில் முழுமையாக காணமுடியாவிட்டாலும் இத்தகைய சிறிய இடங்களையாவது பார்வவையிட முடியும். மலைப்பகுதி மென்சாய்வான தோற்றதுடன் காணப்படுவதுடன், சிறிய பல உச்சிகளையும் கொண்டுள்ளது.
மலையின் ஒரு சிகரத்தில் இந்து மக்களின் தெய்வமான பிள்ளையார் சிலையுடைய சிறிய கோவில் ஒன்று காணப்படுகின்றது. அழகிய தோற்றத்துடன் இந்தப் பிள்ளையார் சிலை காட்சியளிக்கின்றது. மலையிலிருந்து பார்க்கின்றபோது நிலத்தோற்றம் மிகவும் அழகாக காட்சியளிக்கின்றது. சிறிய விளைநிலங்கள் , தொலைவில் தெரியும் குடில்கள் என இயற்கையை ரசிப்போரை மகிழ்விக்கக்கூடியது இந்த கடைசிமலையாகும்.
கடைசிமலையில் புதிதாக ஏறுவோர் தமது இடத்திற்கு திரும்பி இங்கிச் செல்வதற்கு வழிதெரியாமல் அவதிப்படுவது வழக்கமாகும். இதற்கு கடைசிமலையில் காணப்படுகின்ற திசை தப்பி செடி ஒன்றுதான் காரணம் என்று சிலர் கூறகின்றார்கள். அதாவது திசை தப்பிச் செடி எம்மில் பட்டவுடன் எம்மால் சரியாக நாம் ஏறிய பாதையை அறியமுடியாதவாறு மாற்றிவிடுமாம் என்றும் கூறுகின்றார்கள. உண்மையில் இதற்கான காரணத்தை நாம் நேரில் சென்றதனூடாக அறிய முடிந்தது.
1.மலையானது சமதரையான மேல்பகுதியைக் கொண்டிப்பதனால் மேலிருந்து பார்க்கின்றபோது மலைஅடிவாரம் எமக்குத் தெரிவதில்லை. இதனால் வந்த பகுதியை மேலிருந்து பார்க்கின்றபோது அடையாளப்படுத்த முடியாதுள்ளது. அத்துடன் இடையிடையே பள்ளத்தாக்குகளையும் கொண்டுள்ளமையினால் குறிப்பிட்ட அடிவாரத்தை காண்பது அரிதாகும்.
2. மலைப்பகுதியில் எல்லா இடங்களும ஒரே தோற்றப்பாட்டுடனேயே காணப்படுகின்றமையும் திசை மாறுவதற்கு காரணமாகும். குறிப்பாக பாறையின் நிறம் பெரிதும் ஒரே வகையாகக் காணப்படுவதுடன், ஒரே வடிவிலான பள்ளத்தாக்குகள் பல இடங்களில் காணப்படுகின்றன. அத்துடன் ஒரே உயரமுடைய சிறய மரங்கள் எல்லா இடத்திலும் காணப்படுகின்றன. இவை சரியான இடத்தை தேர்வு செய்வதில் எமக்கு குழப்பத்தை உண்டாக்கும்.
இத்தகைய அழகியதும், விந்தையானதுமான கடைசிமலை எமது மாவட்டத்தில் அமைந்துள்ளமையினை நினைத்து நாம் பெருமைப்படவேண்டும்.
