24 August 2014

சித்தாண்டி தீர்த்தக்குளப் பிரதேசத்தில் சிரமதானம்

SHARE
(Rajan) சித்தாண்டி உதயன்மூலை தீர்த்தக்குளம் மற்றும் சுற்றியுள்ள பிரதேசத்தில் இன்று (24.08.2014) சிரமதான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. சித்தாண்டி -03 கிராம உத்தியோகத்தர் திரு. சுதாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சிரமதான நிகழ்வில் சித்தாண்டி 04 கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் நா.திருநாவுக்கரசு மற்றும் உறுப்பினர்கள், உதயன்மூலை பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

நடைபெறவிருக்கும் சித்தாண்டி ஶ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய தீர்த்தோற்சவ நிகழ்வுகளை முன்னிட்டு இக்குளப் பகுதி சுத்திகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user