01 October 2014

விநாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர்தினம்

SHARE
(Sanjee) கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட சித்தாண்டி விநாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயத்தில் இன்று (01.10.2014) வருடாந்த சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெற்றன. 
பாடசாலையின் அதிபர் திரு. பூ.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையிலும், ஆசிரியர்ர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திரு. கா.சுப்பிரமணியம் (கல்குடா கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்) அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு. க.பகீரதன் (அதிபர், சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலயம்),  திரு.எஸ். கணேசமூர்த்தி (அதிபர், ஈரளக்குளம் அ.த.க. பாடசாலை) , மாவடிவேம்பு -02 கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். 

மேலும் இந்நிகழ்வில்  பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாதர் அமைப்புக்களின் உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது   மாவடிவேம்பை சேர்த்த திரு. எஸ்.முத்துப்பிள்ளை என்பவர் முதியவர்கள் சார்பில் பாடசாலை மாணவர்களால் கௌரவிக்கப்பட்டார்.































SHARE

Author: verified_user