16 November 2014

முன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் மாவடிவேம்பு வீதி புனரமைப்பு

SHARE
முன்னாள் முதல்வரும்,ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை - சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மாவடிவேம்பு 02, நாவுக்கரசர் வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றது. 

மாரி மழை காலம் நெருங்குகின்றமையால், வெள்ளகாலத்தில் வீதியினை பயன்படுத்துகின்றபோது பல அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டி வரும் என்பதனை கருத்தில் கொண்டு இவ்வீதி விரைவாக புனரமைக்கப்பட்டு வருகின்றது. 

இதன்போது ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி இணைப்பாளர் ஆ.தேவராசா மற்றும் சித்தாண்டி 04 கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ந.திருநாவுக்கரசு, மற்றும் மாவடிவேம்பு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் சி.திருப்பதி அவர்களும் பார்வையிடுவதனை காணலாம்.





SHARE

Author: verified_user