06 December 2014

மட்டக்களப்பில் நேற்றிரவு முதல் பெய்து வரும் மழை

SHARE
மட்டக்களப்பில் நேற்றிரவு (05.12.2014) முதல் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வருகின்றது. இன்று காலை 8.30 மணிவரை கிடைத்த வானிலை தகவல்களின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 40.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாக இலங்கை வானிலை ஆராய்ச்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று காலை 5.30 மணியளவில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில்,  நாட்டின்  கிழக்குப் பாகத்தில் மழை அதிகரிக்கும் எனவும், கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் மாலைவேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




SHARE

Author: verified_user