29 July 2023
25 July 2023
ஆசிரியர்களுக்கு அவசியமான ஒரு புத்தகம் தரவிறக்கம்
வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உள்வாரி வெளிவாரி மதிப்பீட்டின்போது வைத்திருக்கவேண்டிய ஆவணங்களில் உள்ளீடுகளுக்குரிய ஆவணங்களும், வெளியீட்டைக் காட்டி நிற்கும் ஆவணங்களையும் அதிகாரிகள் கேட்பார்கள். அந்தவகையில் அவற்றில் பெரும்பாலானவற்றை உள்ளடக்கி ஒரு ஆசிரியர் பதட்டமின்றி, அச்சமின்றி தங்களுடைய பணியைச் செய்வதற்கு உறுதுணையாக இருப்பதற்கு வலுசேர்க்குவிதமாக இந்த "ஆசிரியர் பதிவு புத்தகம்" என்ற தொகுப்பை 2023 ஆண்டில் மேலும் சில இற்றைப்படுத்தல்களுடன் இங்கே பதிவிடுகிறேன். இவற்றை தேவையானவர்கள் பிரிண்ட் எடுத்து புத்தகமாக பயன்படுத்துங்கள். இவற்றில் சில படிவங்கள் அதிகமாகத் தேவைப்பட்டால் அதற்கேற்ற வகையில் பிரிண்ட் செய்து பயன்படுத்துங்கள். 18 August 2021
ரஷ்யாவின் கல்வி முறை
ரஷ்யாவில் படிக்கும் ஒரு மாணவன் உங்களுடன் பேசுகின்றான்:-
"ரஷ்யாவில் பெரும்பாலான பரீட்சைகளுக்கான அதிகபட்ச புள்ளி 5 ஆகும். ஒரு மாணவன் எந்தவொரு வினாக்களுக்கும் விடையளிக்காமல், வினாத்தாளை வெறுமையாக வைத்துவிட்டு பரீட்சை மண்டபத்தில் இருந்து வெளியேறிச் சென்றாலும் அவனுக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
அது, மொஸ்கோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் என்னுடைய முதல் நாள். நான் இந்த முறைமையை பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. நான் கேள்விப்பட்டதும் வியந்துபோனேன். இது தொடர்பாக கலாநிதி. தியோடர் மெட்ரேவ் அவர்களிடம் வினவினேன்.
சேர், ஒரு மாணவன் எந்தவொரு வினாக்களுக்கும் விடையளிக்காமல் எவ்வாறு அவனுக்கு இரண்டு புள்ளிகள் வழங்குகிறீர்கள்?
ஏன் அவனுக்கு பூச்சியம் என்ற மதிப்பீடு வழங்குவதில்லை?
நீங்கள் செய்வது ஏற்றுக்கொள்ள முடியுமான ஒன்றா?
அதற்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்."
"எவ்வாறு நாங்கள் ஒரு மனிதனுக்கு பூச்சியம் என்ற மதிப்பீடு வழங்க முடியும்?
காலையில் ஏழு மணிக்கு எழுந்து, ஆயத்தமாகி அனைத்து விரிவுரைகளுக்கும் சமூகமளிக்கும் அவனுக்கு எவ்வாறு பூச்சியம் என்ற மதிப்பீடு வழங்க முடியும்?
கடுமையான குளிருக்கு மத்தியில் பொதுப் போக்குவரத்தில் பயணித்து பரீட்சைக்கு சமூகமளித்து வினாக்களுக்கு விடையளிக்க முயற்சிக்கும் அவனுக்கு எவ்வாறு பூச்சியம் என்ற மதிப்பீடு வழங்க முடியும்?
பரீட்சைக்காக இராப்பொழுதுகளை கழித்து, படிப்புக்காக என்று பென்சில், பேனை, புத்தகம், கணினி என்பவற்றை வாங்குவதற்கு அதிக பணத்தை செலவிடும் ஒருவனுக்கு எவ்வாறு பூச்சியம் என்ற மதிப்பீடு வழங்க முடியும்?
தேவையற்ற விடயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை தவிர்து அறிவைத்தேடுவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் ஒருவனுக்கு எவ்வாறு பூச்சியம் என்ற மதிப்பீடு வழங்க முடியும்?
மகனே, அவனுக்கு விடை தெரியாது என்ற காரணத்தினால் எங்களால் பூச்சியம் என்ற மதிப்பீடு வழங்க முடியாது. அவனுக்கு மூளை உண்டு. அவன் முயற்சிக்கின்றான். அவன் ஒரு மனிதன் என்ற யதார்த்தத்தை உணர்ந்து எங்களால் முடிந்தளவு அவனை மதிப்பதற்கு முயற்சிக்கின்றோம்.
ஏனெனில் நாங்கள் வழங்கும் பெறுபேறு வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு மட்டுமானது அல்ல. அது ஊக்குவிப்பை வெளிப்படுத்தக் கூடியது, மனிதன் என்ற யதார்த்தத்தை மதித்து அவனை வளமாக பயன்படுத்துவதற்கான தகுதியை வழங்கக் கூடியது"
அந்த மாணவன் தொடர்ந்தும் பேசுகின்றான்:-
"உண்மையில் அழுதுவிட்டேன். எனக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று தெரியவில்லை. அப்போதுதான் ஒரு மனிதனாக எனது பெறுமதியை அறிந்துகொண்டேன்.
பூச்சியம் என்ற மதிப்பீடு மாணவர்களை ஊக்கப்படுத்துவதை குறைத்துவிடும். அவர்களை விரைவில் காயப்படுத்திவிடும். தங்களுடைய படிப்பை முன்னெடுத்துச் செல்வதை நிறுத்திவிடும்.
பூச்சியம் என்ற மதிப்பீடு ஒரு மாணவனுக்கு வழங்கப்பட்டுவிட்டால் அவனுக்கு குறித்த பாடத்தைப்பற்றி கவனம் எடுக்க கூடுதலான காலம் அவசியம் இல்லை. இந்த பாடத்தில் என்னால் எதுவுமே செய்ய முடியாது என்று இலகுவாக நினைத்துவிடுகின்றான்.
எங்களுடைய நாடுகளில் உள்ள பழைய கல்வி முறையை மாற்றவேண்டும். அந்த மாற்றத்திற்கான ஒரு செய்தியாக இந்த கதையை எங்களுடைய ஆசிரியர்களுக்கு கூறுகின்றேன்."
மூலம்:- (https://m.facebook.com/story.php?story_fbid=2814475282114533&id=100006562656989)
தமிழில்:- Fazlan Uwaiz
10 April 2017
செயற்றிட்ட கற்பித்தல் முறை (Action Learning Method)
கற்பித்தல் முறைகளில் இன்று அதிகளவூ முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக செயற்றிட்ட முறையானது (Action Learning Method) காணப்படுகின்றது. செயற்றிட்ட முறையானது ஏதாவது ஒரு பிரச்சினைக்கான தீர்வை செயற்பாடு முறையாக தேடிப்பெறுவதன் அடிப்படை பண்பாக இருக்கும்.
இவ் செயற்றிட்ட கற்பித்தல் முறையினை “கீல் பெற்றிக்” என்பவர் 1918ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். செயல்வழி கற்பித்தல் முறை என்பது ஒரு பிரச்சினையை இனங்கண்டு தீவூக்காகத் திட்டமிடலும் நடைமுறைப்படுத்தலும் அதன் விளைவூகளை அறிதலும் ஆகிய செயன்முறைகளைக் கொண்ட சுழற்சிப்படிமுறையாகும். (Kurt Lewin 1943). குறிப்பாக பார்த்தால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஒருவர் தனியாகவோ அல்லது கூட்டாகவோ கருத்துள்ள செயற்றிட்ட செயற்பாட்டினை முன்னெடுப்பதாகும். இங்கு நோக்கமானது முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றதோடு கருத்துள்ள செயற்பாடாகவூம் அமைந்திருக்க வேண்டும்.
செயலும் ஆய்வூம் இணைக்கப்படும் போது செயல் என்பது ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட விசாரணையாகிறது. இதன் மூலம் நடைமுறையை விளங்கி விருத்தி செய்து சீர்திருத்துவதற்கு மேற்கொள்ளப்படும் தனிப்பட்ட முயற்சியே செயல்வழி கற்பித்தலாக அமைகின்றது. (Hopkins 1985). செயல்வழி கற்பித்தல் என்பது ஆய்வூக்கும் நடைமுறைக்கும் இடையிலுள்ள தூரத்தினைக் குறைப்பதாகும். இதன் மூலம் நடைமுறையில் தாக்கம் செலுத்துவதற்கு ஆய்வினால் முடியாதிருக்கும் நிலையினைக் குறைக்க முடியூம். (Somekh 1995). செயல்வழி முறை என்பது ஒருவகையான சுயபிரதிபலிப்புச் சிந்தனை விசாரணையாகும். சிறிய அளவிலான செயற்பாட்டுக் கண்டுபிடிப்பே செயல்நிலை கற்பித்தலாகும்.
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட புவியியல் பாடத்தினை மையமாகக் கொண்ட செயற்பாடாகக் கொண்ட செயற்பாடாக காணப்படுகின்றது. இங்கு வானிலை மாற்றமான வெறுமனே பாடப்புத்தகத்தில் உள்ளதை வைத்துக்கொள்ளாமல் தேடி செயற்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. இம்முறையானது பிரதானமான ஒரு செயற்பாடாகவே காணப்படுகின்றது. அதாவது ஒரு பாடசாலை வகுப்பறை செயற்பாட்டில் செயற்றிட்டத்தினை மையமாகக் கொண்ட செயற்பாடு பிரதான ஒரு செயற்பாடாகவே காணப்படுகின்றது. அதாவது செயற்பாடுகள் யாவூம் ஏதாவது ஒரு கற்றல் குறிக்கோளினை அடிப்படையாகக் கொண்டமையூம் பிரதான விடயமாகும். உதாரணமாக பரிசோதனைகள் அதிகமாக இன்று விஞ்ஞானப்பாடத்தில் பயன்படுகின்றது.
செயற்றிட்ட கற்பித்தல் முறையானது அதிகளவூ மாணவர்களை மையமாக் கொண்டவொரு கற்பித்தல் விடயமாக அமைகின்றது. இதிலே செயற்பாடுகள் என்பன நடைமுறையூடன் தொடர்புப்பட்டதாக காணப்படும். குறிப்பாக கருத்துள்ள, உயிர்ப்புள்ள யதார்த்தமான செயற்பாடுகளாக அமையூம். அதாவது இங்கு அதிக பிரச்சினைகளை யதாரத்த நிலையோர் பார்க்கின்ற போது அது உயிர்ப்புள்ள ஒரு செயற்பாடாகவே காணப்படுகின்றது. கற்பித்தல் முறையில் செயற்பாடுகள் யாவூம் மாணவர்களினால் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
செயல்வழி கற்பித்தலானது பின்வரும் பண்புகளை வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.
- அறிவூப் புலத்தினை மேலெழச் செய்ய முடியூம்
- கோட்பாட்டிற்கும் பிரயோகத்திற்குமான இடைவெளியினைக் குறைக்க முடியூம்
- ஆசிரியரின் வான்மை விருத்திக்குதவூம்
- தரவட்டங்களைக் கட்டியெழுப்ப உதவூம்
- ஆய்வாளனின் அறிவூக்கேற்பக் கட்டியெழுப்ப முடியூம்.
- ஆசிரியருக்குப் பயிற்றுவிக்கப் பொருத்தமான முறையாகும்.
- கூடியளவூ இம்முறையில் ஆசிரியருக்கு வலுவூட்டலாம்
கீழ் நிலையில் மாற்றத்தினையூம் முன்னேற்றத்தினையூம் ஏற்படுத்துவதற்கான பலம்வாய்ந்த கருவியாக செயல்நிலை கற்பித்தலானது அமைகின்றது. இச் செயல்நிலை கற்பித்தல் முறையானது பல்வேறு பரப்புக்களில் மேற் கொள்ளக் கூடியதாவூள்ளது.
உதாரணமாக …
கற்பித்தல் முறை - மரபாh;ந்த முறைக்குப் பதிலாக பயன்படுத்தக் கூடிய புதிய முறை தொடர்பில் நோக்குவதற்கும்
கற்றல் தந்திரோபாயங்களின் போது – போதனைக்குப் பொருத்தமான அணுகு முறைக்காகவூம்
வாழ்வின் சிலபாpமானங்களுக்காக – ஏற்கத் தக்க விழுமியங்களைப் பதித்தல் அல்லது திருத்தியமைத்தல்
வாண்மை விருத்திக்காக – வாண்மையின் பல்வேறு பாpமாணங்களையூம் விருத்தி செய்தல் கற்பித்தலை மேம்படுத்தல் மேற்பார்வையை விளைதிறனாக்குதல்
முகாமைத்துவம் - தலைமைத்துவம் தொடர்பாடல் ஆளிடைத் தொடர்பு பங்கேற்புத் திட்டமிடல் போன்றவற்றினை மேம்படுத்தல்
எனவே செயற்றிட்ட கற்பித்தல் முறையானது மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு அதிகளவூ முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
செயல்நிலை கற்பித்தல் முறையானது பின்வரும் வகையில் ஒழுங்கு அடிப்படையில் காணப்படுகின்றது.
தந்திரோபாயத் திட்டமிடல்
திட்டத்தினை அமுலாக்கல்
அவதானிப்பு – மதிப்பீடு – சுயமதிப்பீடு
முடிவூகள் தொடர்பான வெளிப்பாடுகள் அடுத்த செயலொழுங்குகளுக்கான செயல்நிலை ஆய்வூ தொடர்பில் இரு நிலையூள்ளது.
1 பிரச்சினை இனங்காணும் நிலை - இங்கு கருதுகோள் கட்டியெழுப்பப்படும்
2 கருதுகோள் பரீட்சித்தல்
செயல்நிலை கற்பித்தல் முறையில் தொடர்பில் நான்கு படிநிலையூள்ளது.
திட்டமிடல்
செயற்படுத்தல்
அவதானித்தல்
பிரதிபலித்தல்
செயல்வழி கற்பித்தல் முறையானது குறிக்கோள்களை அடையூம்வரை தொடர்ச்சியானதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதுமான பலபடி முறைகளில் வழிகளில் ஆய்வூச் செயன்முறைகள் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாகவூள்ளது. கல்வித் துறையூடன் தொடர்புபட்ட வகையில் செயல்நிலை கற்பித்தலானது இன்று முக்கியத்துவமுடையதாக மாறியூள்ளது. குறிப்பாக பாடசாலையில் வகுப்பறையில் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வூ காணும் நிலையில் செயல்நிலை முறையானது முக்கியத்துவமுடையதாகின்றது.
செயல்வழி கற்பித்தலானது குறிப்பிட்டவோ சந்தர்ப்பத்தில் உடன்பாடான மாற்றங்களை ஏற்படுத்துவதனை நோக்காகக் கொண்டுள்ளதே தவிர பொதுமையாக்கலையல்ல. செயல்வழி முறையானது பாடசாலைகளில் பல சுழற்சிகளை கொண்டதாக காணப்படுகின்றது.
ஒரு வகுப்பறையில் செயல்நிலை கற்பித்தல் முறையானது பின்வரும் வகையில் படிகளை கொண்டதாக காணப்படுகின்றது.
பிரச்சினையை அடையாளப்படுத்தல்
சூழ்நிலையினை விளங்கிக் கொள்ளல்
செயற்பாட்டு உபாயங்களை விருத்தி செய்தல்
அவற்றை நடைமுறைப்படுத்துதல்
ஆசிரிய அறிவூட்டப்படல்
ஆசிரியரின் பிரயோகம் தொடர்பில் விளங்கிக் கொள்ளல்
வகுப்பறைச் சூழ்நிலை விருத்தி செய்யப்படல்
செயற்றிட்ட வளங்களாக உற்பத்திச் செயற்றிட்டங்கள் அதாவது கற்றல், வேறு ஏதாவதை உற்பத்தி செய்தலாக அமைகின்றது. உதாரணமாக கண்காட்சி, நாடகம், மழைமானி ஆக்கல், மணல் மணிக்கூடு செய்தல், நிறச்சாயம் தயாரித்தல் என்பவையாகும். அத்துடன் முருகியல் இன்பத்தை நோக்கமாக கொண்ட திரைப்படம், நாடகம் ரசித்தல், விமர்ச்சித்தல், கல்விச் சுற்றுலாவில் பங்கு கொள்ளல், சங்கீதம் கேட்டல், ஓவியம் ரசித்தல் என்பவையாக உள்ளன. அதிகளவூ பிரச்சினைகளை தீர்ப்பதில் இக்கற்பித்தல் முறையானது பங்குக்கொள்கின்றது. உதாரணமாக பார்த்தால் திறன்களை வழங்கும் பயிற்சிச் செயற்றிட்டங்கள், இதிலே தமிழ்மொழிப் போட்டிப் பயிற்சிகள், கணிதப்பிரச்சினை தீர்த்தல், பல்வேறு விடயங்களில் நிபுணத்துவ அறிவைக் கொடுக்க இம்முறையானது மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றது.
செயற்றிட்ட முறையினை நிறைவேற்ற பின்வரும் நான்கு படிமுறைகளை கைக்கொள்ளலாம்.
பிரச்சினையை தீர்த்துக் கொள்ளல்
திட்டமிடல்
திட்டத்தை நடைமுறைப்படுத்தி நிறைவேற்றல்
மதிப்பிடல்
குறிப்பாக ஒவ்வொரு படிமுறையிலும் மாணவர்களின் எண்ணங்களைக் கருத்திற் கொண்டு இவர்களின் செயற் திறன்களை ஊக்குவித்தத் தூண்டுதல் மிக முக்கியமாகும். முதலாவது படியில் பாடம் தொடர்பான பிரச்சினையை தீர்மானித்தல், அடுத்து பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிகளைத் திட்டமிடல், திட்டமிடலைச் செயற்படுத்தல், ஆசிரியர் மேற்பார்வை செய்தல், பலனைப் பெறல், பின்னர் குறிக்கோள்கள் நிறைவேறினவா என்பதனை மதிப்பிடலாக அமைகின்றது.
நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள இம்முறை பெறும் பயற்சி அளிப்பதால் வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல்களை மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றார்கள். அதிலும் தவறுகளை முன்கூட்டியே அறியக் கூடியதாக இருக்கின்றது. இன்று பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடானது 5E மாதிரி முறையினைக் கொண்டிருக்கின்றமை முக்கியமான ஒரு விடயமாகும்.
By:V.Prashanthan B.Ed. (Hons), M.Ed (Reading)
13 February 2017
கல்வித் திட்டமிடல்
முகாமைத்துவக் கருமங்களினூடாக (Management Process) அடைய எதிர்பார்க்கப்படும் பிரதான இலக்கு நிறுவனத்தின் வெளியீடு ஆகும். நிறுவன நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு வளங்களை முகாமைத்துவக் கருமங்களினுள் உட்படுத்தி இத்தகைய பணி இடம்பெறுகின்றது.
முகாமைத்துவ செயன்முறை என்பது குறித்துரைக்கப்பட்ட ஒரு நுட்பத்தின் கீழ் நிறுவனக் கருமங்களை மேற் கொள்ளுதல் ஆகும்.
முகாமைத்துவ செயல் முறையில் உள்ளடங்கும் கருமங்களாக தற்காலத்தில் பின்வரும் நான்கு பிரதான கருமங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
திட்டமிடல் (Planning)
ஒழுங்கமைத்தல் (Organizing)
தலைமை வகித்தல் (Leading)
இயைபாக்கல்
கட்டுப்படுத்தல் (Controlling)
தற்காலத்தில் சில நூல்களில் முகாமைத்துவக் கருமங்களை மேற்குறிப்பிட்ட கருமங்களுக்கு மாறாக வேறு வகையில் குறிப்பிடுகின்றனர். அதாவது திட்டமிடல்இ ஒழுங்கமைத்தல்இ நெறிப்படுத்தல், (Directing) மற்றும் கட்டுப்படுத்தல் என்றவாறு வகைப்படுத்துவதோடு மேலும் சில நூல்களில் திட்டமிடல்இ ஒழுங்கமைத்தல்இ நெறிப்படுத்தல் இ திணைக்களப்படுத்தல், (Staffing) கட்டுப்படுத்தல் எனவூம் வகைப்படுத்துகின்றனர். மேற் குறிப்பிட்ட வகைப்பாடுகளில் எது சரியானது என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது. எவ்வாறெனினும் இன்று பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்ற பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்ற வகைப்பாடாக முதற் குறிப்பிட்ட நான்கு முகாமைத்துவக் கருமங்களையே நாம் குறிப்பிடலாம்.
திட்டமிடல் (Planning) என்பது நிறுவனத்தின் நோக்கங்களை வரையறுத்துக் கொள்ளல் இ அத்தகைய நோக்கங்களை அடைந்து கொள்வதற்கப் பொருத்தமான வழி வகைகளை தீர்மானித்துக் கொள்ளல் ஆகும். (The process of establishing goals and a suitable course of action for achieving those goals). அதாவது ஒரு நிறுவனத்தின் நோக்கத்தினை வரையறுத்து அதனை அடையூம் பொருட்டு செயற்பாடுகளை திர்மானித்து அவற்றினைக் ஒன்றினைத்துக் கொள்வதனை திட்டமிடல் செயற்பாடானது குறிக்கின்றது. திட்;டமிடல் என்ற செயற்பாடானது நாம் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும்இ யாரால் செய்யப்பட வேண்டும்இ எவ்வாறு செய்யப்படல் வேண்டும் போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு திட்டமிடலானது எதிர்கால நிகழ்வூகள் தொடர்பாக நிகழ்காலத்தில் தீர்மானங்களை மேற்கொள்வதாகும்.
நிறுவனம் ஒன்று குறிப்பிட்ட காலத்தின் பின் எத்தகைய நிலையில் காணப்பட வேண்டும்? அந்நிலைக்கு நிறுவனத்தைக் கொண்டு செல்வது எப்படி? போன்ற கேள்விகளுக்கான விடை திட்டமிடல் பணியினூடாக கிடைக்கின்றது. திட்டமிடல் என்பது மிக முக்கியமானதாகும். முகாமைத்துவப் பணிகளைப் பொறுத்தமட்டில் ஆரம்பப் பணியாகவூம் காணப்படுகின்றது. இதற்கு காரணம் திட்டமிடலினை அடிப்படையாகக் கொண்டே ஏனைய முகாமைத்துவக் கருமங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நிறுவனம் செல்ல வேண்டிய பாதை எது என்பதை வரையறுத்துக் கொள்வது திட்டமிடல் ஆகும். மேலும் எதிர்கால மாற்றங்கள் நிச்சயமற்ற தன்மைகளுக்கு சிறப்பாக முகங்கொடுப்பதற்கச் சிறந்த திட்டமிடல் அவசியமானதாகும்.
ஒரு திட்டமிடலை மேற்கொள்ளும் போது நான்கு விடயங்கள் தொடர்பாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
நோக்கத்தை வரையறுத்தல்
நோக்கத்தை அடையூம் பொருட்டு கொள்கைகளை தீர்மானித்தல்
செயற்பாடகளை மேற்கொள்ளும் பொருட்டுஇ வளங்களை ஒதுக்கீடு செய்தல்
செயற்பாடுகளை அமுல்படுத்தல்
“திட்டமிடத் தவறுதல்இ தவறு செய்யத் திட்டமிடுதலுக்கு ஒப்பானது" (If you fail to plan, you are planning to fail) ) என்ற பழமொழி நம் வாழ்வின் பல்வேறு கூறுகளுக்கும் பொருந்தக் கூடியதாகும். உண்மையில் திட்டமிடுதல் என்றால் என்ன? திட்டமிடுதல் என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை எட்டுவதற்கான வழிகளை யோசித்துஇ அவற்றை நடைமுறைப்படுத்துவதே ஆகும். எமது இலக்கு அல்லது குறிக்கோளில் நாம்; தௌpவாக இல்லையெனில்;இ சரிவர திட்டமிட இயலாது. எனவேஇ திட்டமிடுதலுக்கு அதி முக்கியமானது முதலில் நாம் விரும்பும் இலக்கு என்ன என்பதைப் பற்றிய தௌpவடைதல் மிக முக்கயமாகும். நம் வாழ்வில் ஏராளமான விடயங்களுக்கான திட்டத்தை மனதளவிலேயே நிகழ்த்தப்படுகிறது. உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களைக் கொண்டு திட்டமிடுதல் என்பது மிக குறைவான ஒன்றாக காணப்படுகின்றது.
முக்கியமாக நிதி தொடர்பான விடயங்கள் சம்பந்தமாக எடுக்கப்படும் முக்கிய முடிவூகளில் திட்டமிடல் நடைமுறையாகும். உதாரணமாகஇ பெற்றௌர்கள் குழந்தையின் மேற்படிப்புக்கு உதவூம் வண்ணம் ஏதேனும் ஒரு தொகையை சேமிக்க எண்ணுகிறீர்கள். ஒரு குழந்தை நலத்திட்டத்தை தேர்வூ செய்து அது பெற்றௌரின் எண்ணம் ஈடேறுவதற்கு உதவூம் என்று அவர்களாகவே முடிவூ செய்து கொள்கிறீர்கள். குழந்தையின் படிப்பு மற்றும் பணி ஓய்வூ போன்ற இலக்குகள் பெற்றௌரின்; மனதில் இருந்தாலும்இ அவர்கள் தேர்வூ செய்யூம் திட்டங்களின் குறை நிறைகளை எடை போட்டுஇ தேவையான பலன் எப்போது கிடைக்க வேண்டும் என்பதை நிர்ணயித்துஇ இலக்கை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அலசி ஆராய்ந்து நல்ல முடிவெடுக்க பெற்றௌர்கள் தவறி விடுகிறீர்கள். இது சரியான திட்டமிடுதல் ஆகாது.
மேம்போக்காக ஏதோ ஒன்றை தேர்வூ செய்து எதிலோ ஒன்றில் முதலீடு செய்வது இலக்கை எட்டுவதற்கு எவ்வழியிலும் எமக்கு உதவாது. இலக்குகள் அனைவருக்கும் வாழ்நாளில் எட்ட வேண்டியவை என்று சில இலக்குகள் மற்றும் மைல்கற்கள் இருக்கும். இவை தொழில்முறை சார்ந்ததாகவோ தனிப்பட்ட வாழ்வை சார்ந்ததாகவோ இருக்கலாம். இவற்றுள் பெரும்பாலானவற்றுக்குஇ அதிலும் முக்கியமாக தனிப்பட்ட வாழ்வைச் சார்ந்தவற்றுக்குஇ பணம் அத்தியாவசியமானதாக இருக்கலாம். ஆகவே இவ்வாறான விடயங்களுக்கு திட்டமிடல் என்பது அவசியமான ஒன்றாகும்.
எனவே வாழ்வின் சில பிரதான குறிக்கோள்களை எட்டுவதற்குஇ எவ்வளவூ நிதி நிலவரத்தை திட்டமிடல் என்பதே அடிப்படையாக இருக்கும். நிதி திட்டமிடுதல் தனிப்பட்ட வாழ்வின் குறிக்கோள்களான கனவூ இல்லத்தை வாங்குவதுஇ கனவூ வாகனத்தை சொந்தம் கொள்வதுஇ குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை அளிப்பதுஇ விடுமுறைகளுக்குச் செல்வதும்இ விரும்பும் நேரத்தில் பணி ஓய்வூ பெறுவது போன்ற அனைத்திற்கும் பணம் தேவைப்படுவதினால்இ இவை அனைத்தும் நிதி சார்ந்த இலக்குகளாக இருக்கிறது. இவை அனைத்திற்கும் திட்டமிடுதல் மிக அவசியமாகும். இதுவே நிதி தொடர்பான திட்டமிடுதல் என்பதாகும்.
நிதி தொடர்பான திட்டமிடல் என்பது சிறப்பான நிதி நிர்வாகத்தின் மூலம் வாழ்வின் இலக்குகளை எட்டுவதற்கான ஒரு செயற்பாடாகும். இது ஒரு தனிப்பட்ட நபரின் மற்றும் குடும்பத்தின் தேவைகள் மற்றும் விருப்பங்களை கண்டு கொள்ள வாய்ப்புக்களை வழங்குகின்றது. பணத்தின் அளவீடுகளிலான இலக்குகளாக மாற்றிஇ தனிப்பட்ட நபரின்ஃகுடும்பத்தின் எதிர்கால குறிக்கோள்களை சரியான நேரத்தில் எட்டுவதற்கான நிதி முதலீடுகளை திட்டமிட உதவூவதாகும். ஒரு நிதித்திட்டம் என்பது; எதிர்கால இலக்குகளுக்கானதொரு திட்டமிடலாக காணப்படுகின்றது. எனவே இன்று திட்டமிடலானது நடைமுறையான வாழ்வில் காணப்படுகின்றது. இன்று சகல துறைகளிலம் இவ் திட்டமிடல் செயற்பாடானது முக்கியப்படுத்தபடுகின்றது. குறிப்பாக கல்வி நிறுவனங்களில் அதிகமாக காணலாம். அதாவது ஒரு நாட்டின் மக்கள் தமது வாழ்வின் தேவைகளையூம்இ குறிக்கோள்களையூம் கிடைக்கும் வளங்களின் அடிப்படையில் ஆகக் கூடிய வினைத்திறன் மற்றும் பயனுறுதி தன்மையூடன் அடைவதற்கான விஞ்ஞான ரதீயான அமைந்த ஒழுங்கான ஒரு செயன்முறையே கல்வித்திட்டமிடல் ஆகும். கல்வித்துறையில் திட்டமிடலானது சகல தேவைகளையூம் குறிக்கோள்களையூம் மையமாக கொண்டே ஒரு நிறுவனத்தின் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. பாடசாலை ஒரு நிறுவனம் என்ற ரீதியில் மிகவூம் உச்சமான வினைத்திறனையூம்இ விளைத்திறனையூம் எதிர்பார்த்து தன்னுடைய சகல விதமான நடவடிக்கைகளையூம் சிறப்பான முறையில் தீர்மானித்து செயற்படுகின்றது. பொதுவாகவே கல்வித்துறையில் இத்தகைய தீர்மானம் பற்றிய விஞ்ஞான ரீதியான ஒரு பொறிமுறையே கல்வித்தி;ட்டமிடல் எனப்படுகின்றது.
இன்றைய நிலையில் சமூகத்தினரின் வாழ்க்கை நிலையினை உயர்த்துவதில் திட்டமிடல் எல்லா நாடுகளினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. நாட்டின் வளர்ச்சிப் பாதையை எடுத்து நோக்கினால் அது பல கூறுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. மக்களது பொருளாதார நிலையினை உயர்வடையச் செய்தல்இ வேறுபாடின்றி அனைவரும் முன்னேற்றமடைய வாய்ப்பு வழங்குதல்இ மக்களது உடல் நலம் பேணல் என்பன அவற்றுள் சிலவாகக் காணப்படுகின்றன. எந்தத் துறை சார்ந்ததாக மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களும் காலம்இ இடம்இ வளங்களின் அளவூ தேவைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடல் செய்முறைக்கு உட்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன.
ஒரு நாட்டின் தேவைக்கேற்ப அமைக்கப்படும் கல்வித் திட்டமிடலானது தேசிய மாகாணஇ மாவட்டம் என்றவாறு பல படிகளைத் தாண்டி பாடசாலை மட்டத்திலே பாடசாலை மட்டத் திட்டமிடலாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த வகையில் பாடசாலைத் திட்டமிடலின் வினைத்திறன் விளைதிறனானது அந்தப் பாடசாலை ஆளணியினரிடையே தங்கியூள்ளது எனலாம். பாட இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் அனைத்தும் உள்ளடங்கும் வண்ணம் பாடசாலை மட்டத்திட்டமிடல் திட்டமிடப்படுவது அவசியமாகும். கல்வித்திட்டமிடலின் பிரகாரம் மூன்று தவணைகள் பாடசாலை தொடங்கும் நேரம் முடிவடையூம் நேரம் என்பன எல்லாப் பாடசாலைகளுக்கும் ஒன்று எனினும் பாடசாலை அடைவூகள் வேறுபாட்டிற்குக் காரணம் அப்பாடசாலை மட்டத்திட்டமிடல் செயற்பாடுகளே ஆகும். இந்த வகையில் ஒரு பாடசாலையின் வெற்றிக்கு வழிவகுப்பது சிறந்த திட்டமிடலே என்பதை யாரும் மறுக்க முடியாது.
பொதுவாக இன்றைய நடைமுறை வாழ்க்கையில் சகல விதமான செயற்பாடுகளுக்கும் திட்டமிடல் என்பது அடிப்படையாக அமைகின்றது என்று குறிப்பிடலாம். குறிப்பாக ஒரு நிறுவன மட்டங்களில் முகாமைத்து பணிகளில் திட்டமிடல் செயற்பாடிற்கே அதிகளவான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதனை சாதாரணமாக அவதானிக்கலாம. திட்டமிடலானது ஒரு வேலைக்கு முன்னதாக செய்யப்படும் ஆயத்த நிலையினை குறிக்கின்றது.
By: V.Prashanthan B.Ed. (Hons), M.Ed (Reading)








