08 October 2012

வ.ம.ம.வித்தியாலயத்தின் ஆசிரியர் தினம் - 08.10.2012

SHARE
மட்டக்களப்பு, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று (08.10.2012) வெகு சிறப்பாக பாடசாலை மாணவாகளினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி அவர்கள் கலந்து கொண்டார். 

நிகழ்வையொட்டி காலையில் பாடசாலை மைதானத்திலே ஆசிரியர்களுக்கான கிறிக்கெட் போட்டி ஒன்று நடாத்தப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் , அதிபர் மற்றும் விருந்தினாகள் கௌரவித்து அழைத்து வரப்பட்டு மாணவர்களினால் நினைவுச்சின்னங்கள் வழங்கிக் கொளரவிக்கப்பட்டார்கள். அதேவேளை ஆசிரியர்களினால் விவாதம், பாடல், நடணம் முதலிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.























SHARE

Author: verified_user