17 October 2012

வ.ம.ம.வி. அதிபருக்கு 'குரு பிரதீபா பிரபா' விருது

SHARE
கல்வி மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் சிறந்த முறையில் சேவையாற்றிய ஆசியர்கள், அதிபாகளுக்கு கடந்த 09.10.2012 அன்று கல்வி அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் கொழும்பு மீபே கல்வி அபிவிருத்தி மையத்தில் ஜனாதிபதியினால் 'குரு பிரதீபா பிரபா' எனும் விருது வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு, கல்குடா வலயத்தைச் சேர்ந்த வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு. வ.பஞ்சலிங்கம் அவர்களுக்கும்  'குரு பிரதீபா பிரபா' எனும் விருது; ஜனாதிபதியினால்  வழங்கி வைக்கப்பட்டது.

சித்தாண்டி பிரதேசத்திலே அமைந்துள்ள இப்பாடசாலையானது தொடர்ச்சியாக விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றது. மாகாண மட்டம், தேசிய மட்டம் வரையில் விளையாட்டுத்துறையில் சாதனைகளை புரிவதற்கு பாடசாலையின் அதிபர் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஊக்கப்படுத்தலே காரணமாகும். அந்தவகையில் வலய மட்டத்தில் உள்ள பாடசாலைகளுடன் ஒப்பிடுகின்றபோது சிறந்த விளையாட்டுத்துறையை விருத்தி செய்து இணைப்பாடவிதானத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி சேவை புரிந்தமைக்காக அதிபர் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த சேவைக்காக விருது பெற்ற அதிபர் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை மாணவர்களினால் கடந்த 11.10.2012 அன்று  பாடசாலையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.


விளையாட்டில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், பயிற்றுவிப்பாளருக்கும் அதிபருக்கும் பிரதேச மக்களால் கடந்த வருடம் (2011) இடம்பெற்ற பாராட்டு நிகழ்வின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள்.


SHARE

Author: verified_user