15 November 2012

இலங்கையின் சில பிரதேசங்களில் சிவப்பு மழை

SHARE
கடந்த சில தினங்களாக இலங்கையின் பொலநறுவை, மொனறாகலை போன்ற மாவட்டங்களின் சில பிரதேசங்களில் சிவப்பு நிறத்திலான மழை பெய்து வருகின்றது. 


இன்று (15.11.2012)  காலை 8.00 மணியளவில் பொலநறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டி என்னும் பிரதேசத்தில் சிவப்பு மழை பெய்தது. இதேவேளை நேற்றைய தினம் (14.11.2012) மொனராகலை மாவட்டத்தின் செவணகல , இந்திகொலபஸ்ஸ ஆகிய பகுதிகளிலும் சிவப்பு மழை பொழிந்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை காலநிலை அவதான நிலைய பணிப்பாளர் எஸ்.ஆர் ஜெயசேகர கருத்து தெரிவிக்கையில், 
சாதாரணமாக மீன்மழை ஏற்படுவதைப் போல, மேகத்துக்கு நீர் உறிஞ்சப்படும் போது, சில நிற திரவியங்களும் கலந்து உறிஞ்சப்படுவதால் இவ்வாறான மழை வீழ்ச்சி ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு ஏற்பட வேறு காரணங்கள் உள்ளதா? என்பது தொடர்பில் மழைவீழ்ச்சி குறித்து முழுமையான பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னரே மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே இவ்வாறான பல நிறங்களிலான மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

இதேவேளை இந்தியாவிலும் இதே போன்று சிவப்பு நிறத்திலான மழை பெய்தள்ளது. குறிப்பாக ஜுலை  2001 ஆம் ஆண்டின் ஜுலை 25 தொடக்கம் செப்டம்பர் 23 வரையிலான காலப்பகுதியில் கேரளாவில் இத்தகைய சிவப்பு மழை பெய்துள்ளது. மிக அண்மையில் இந்தியாவில் கடந்த ஜுன் 2012 இல் சிவப்பு மழை பெய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.





SHARE

Author: verified_user