அண்மையில் நாட்டின் சில இடங்களில் பெய்த சிவப்பு மழையிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சாதகமான விடை கிடைத்துள்ளது. `ட்ராகோலேமொனாஸ்' எனப்படும் நுண்ணுயிரே குறித்த மாதிரிகளில் இருந்ததாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார். இச் செம்மழையில் நனைந்தால் அது பொதுமக்களுக்கு தீங்கை உண்டாக்காத நுண்ணுயிர் என்று அறியப்பட்டதாக மருத்துவ ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேற்று கிரகங்களில் இருந்து வந்தவர்களால் சிவப்பு மழை தோன்றியிருக்கலாம் என்று முன்னர் பரவலாக கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தன. எனினும், அவற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்று ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிரக மண்டல ஆய்வாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவிக்கையில்.
இலங்கைக்கு இவ்வாறான சிவப்பு மழை புதிது எனினும், ஏனைய நாடுகளில் இவ்வாறான சிவப்பு நிற மழை வீழ்ச்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெய்திருப்பதாகவும், கடலில் இருந்து ஆகாயத்துக்கு நீர் உறிஞ்சப்படும் போது, சில சமயங்களில் கடலில் காணப்படுகின்ற அரிதான சிவப்பு நிற மாற்றங்களும் சேர்த்து உறிஞ்சப்படலாம்.இதன் விளைவாகவே இந்த மழைவீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
.jpg)
.jpg)
.jpg)
