29 November 2012

செங்கலடியில் நடமாடும் சேவை

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கான உடனடி சேவையினை வழங்கும் பொருட்டு 'தேசத்தின் மகுடம்' தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களில் நடமாடும் சேவை நடைபெற்று வருகின்றது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இன்றைய தினம் (29.11.2012) நடமாடும் சேவை இடம்பெற்றது. செங்கலடியில் அமைந்துள்ள பிரதேச செலயகத்தில்  இடம்பெற்ற இச்சேவையில் பல்வேறு தினைக்களங்கள் தமது சேவையை வழங்கின. ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்ற பெருமளவிலான மக்கள் தமது சேவைகளை இன்றைய தினம் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்தனர்.
நடமாடும் சேவையினை முன்னிட்டு ஏறாவூர் பற்று பிரதேச செலலகத்தில் மிகச்சிறந்த முறையில் வழிகாட்டல் பதாதைகள் மற்றும் ஒழுங்குபடுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















(ஒளிப்படம் :-பிருந்தன்)
SHARE

Author: verified_user