பாலஸ்தீன நாட்டின் ஹமாஸ் படைத்துறைப் பிரிவின் தளபதியான அஹமட் அல் ஜபாரியை கடந்த 14.11.2012 இஸ்ரேல் விமானத்தினால் கொன்றதிலிருந்து இரு நாடுகளுக்குமிடையிலான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக விமான வழித் தாக்குதல்களை ஆரம்பித்திருந்த இஸ்ரேல் தற்போது தரைவழியாகவும் தனது தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றது. இதனால் காசா பள்ளத்தாக்குப் பிரதேசம் யுத்த பூமியாகக் காட்சியளிக்கின்றது.
இந்த நிலைமையில் கடந்த சில தினங்களில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதன் பின்னர் 275 ஏவுகணைகளை காசா பகுதிலிருந்து ஹமாஸ் வீசியதாகவும், இதில் 175 ஐ தமது இரும்புக்கூரைத் தொழிநுட்பம் மூலம் வான்பரப்பிலேயே வைத்து வெடிக்க வைத்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கடந்த 14.11.2012 அன்று ஹமாஸ் தளபதியை இஸ்ரேல் விமானம் குண்டுவீசி அளித்த காட்சி

