18 November 2012

கொம்மாதுறையில் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

SHARE
செங்கலடி, கொம்மாதுறை இராணுவ முகாமில் இன்று (18.11.2012) காலை 11.00 மணியளவில்  தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. 

சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, கொம்மாதுறை, செங்கலடி, களுவன்கேணி முதலிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு இராணுவத்தினரால் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. கொம்மாதுறை இராணுவ முகாமில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொம்மாதுறை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மற்றும் இராணுவத்தினர், குறிப்பிட்ட கிராமங்களுக்குரிய கிராமசேவகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். 















SHARE

Author: verified_user