09 November 2012

சித்தாண்டி, வினாயகர் கிராமம் ஸ்ரீ நாககன்னி அம்பாள் ஆலய பாற்குட பவனி

SHARE
சித்தாண்டி வினாயகர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாககன்னி அம்பாள் ஆலயத்தில் திருக்கேதார கௌரி விரதத்தை முன்னிட்டு விரத பூஜைகள் இடம்பெறு வருகின்றது. விரத நிகழ்வின் ஒரு அம்சமாக இன்று (09.11.2012) விரதத்தை அனுஸ்டிக்கும் அடியார்களின் பாற்குடப் பவனி நிகழ்வு இடம்பெற்றது.
சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து இன்று காலை ஆரம்பித்த பாற்குடப் பவனி நிகழ்வு பிரதான வீதிக்கூடாகவும்,  பின்னர்  காளிகோவில் வீதியினால்  வந்து நாககன்னி அம்பாள் ஆலயத்தை அடைந்தது. இதில் விரதத்தை அனுஸ்டிக்கும் பக்த அடியார்கள், ஆலய பூசகர்கள்  கலந்துகொண்டனர்.



















SHARE

Author: verified_user