13 December 2012

மாவடிவேம்பில் சிரமதானம்

SHARE
மாவடிவேம்பு 02 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (13.12.2012) காலை சிரமதானம் ஒன்று இடம்பெற்றது. 

மாவடிவெம்பு -02 கிராம உத்தியோகஸ்தர் திரு பூ.அருள்நாதன் தலமையில் இடம்பெற்ற இச்சிரமதான நிகழ்வில் , பொருளாதார அபிவிருத்தி உததியோகத்தர் பொ.வரதராஜ், சிவில் குழு உறுப்பினர் சி.திருப்பதி மற்றும் மாவடிவேம்பு 02 பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
சிரமதானத்தின்போது காளிகோவில் வீதி மற்றும் அதனோடு இணைந்த வடிகாண்கள் என்பன சுத்தம் செய்யப்பட்டன. எதிர்வரும் மழை காலத்தினை முன்னிட்டு இத்தகைய சிரமதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










SHARE

Author: verified_user