02 December 2012

சித்தாண்டிக் கலைஞர் ராஜேந்திரம் கௌரவிப்பு

SHARE
சித்தாண்டிக் கிராமத்தைச் சேர்ந்தவரான  நல்லையா – ராஜேந்திரம் என்பவர்  இன்றைய  தினம் (02.12.2012)  ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட கலாசார நிகழ்வின்போது கம்பளம் போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். 

கவிதை எழுதுதல், அலங்கார பொருட்கள் செய்தல், சமூக தொண்டு செய்தல் முதலியவற்றில் தேர்ச்சி பெற்றவரான கலைஞர் ராஜேந்திரம் அவர்கள் 'ஒப்பனைக் கவிக் கலைஞர்' என்ற அடிப்படையில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர் ராஜேந்திரம் அவர்களுக்கு எமது இணையத்தளம் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இதேவேளை சிறந்த கவிதைக் கலைஞனாக தேர்வுசெய்து கௌரவித்த ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கும் எமது பிரதேசத்தை சேர்ந்தவர் என்ற வகையில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.



SHARE

Author: verified_user