03 December 2012

ஒளிவிழா - வ.ம.ம.வித்தியாலயம்

SHARE
சித்தாண்டியில் அமைந்துள்ள வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் ஒளிவிழா நிகழ்வுகள் இன்று(03.12.2012)  பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வினை பாடசாலையின் அதிபர் திரு.வ.பஞ்சலிங்கம் அவர்கள் தலைமையேற்று நடாத்தியிருந்தார். 


நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. ஏ.ஈ.எம். போல் அவர்களும், கௌரவ அதிதிகளாக ஏறாவூர் கோட்டக் கல்வி அதிகாரி திரு. ம.சுகுமார்  அவர்களும், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு. ரவீந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

ஒளிவிழா நிகழ்வுகளைச் சிறப்புக்குமுகமாக மாணவர்களினால்   நாடகம், பாடல் மற்றும் பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவுற்றது.















SHARE

Author: verified_user