06 December 2012

பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

SHARE
மட்டக்களப்பு, கல்குடா வலயத்தில் அமைந்துள்ள பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்றைய தினம் (05.12.2012) பாடசாலையின் அதிபர் திரு. K. கதிர்காமாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்ததுடன், பாடாசலையில் ஒலியமைப்புக்கான உபகரணங்களையும் அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி அவர்கள் கலந்துகொண்டதுடன், அயற்புற பாடசாலையின் அதிபர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
பரிசளிப்பு விழாவினை சிறப்புக்குமுகமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பாடசாலைச் சிறுவர்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகள் சபையோரை பரவசத்தில் ஆழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.











SHARE

Author: verified_user