வீதிக்கு குறுக்காக பல இடங்களில் சிறியளவிலான நீரோடுவதனாலும், வெள்ள நீரினாலும் வீதியின் பல இடங்களில் பள்ளங்களும், நீர்தேங்கி நிற்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
சித்தாண்டி பிரதேச மக்களின் விவசாய நிலங்களுக்கு செல்வதற்குரிய முக்கிய பாதையாகக் காணப்படும் இவ்வீதியினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு திருத்தி தரவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகின்றனர்.
