03 March 2013

கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி - 2013

SHARE
கல்குடா கல்வி வலயப் பிரிவிலுள்ள கோரகல்லிமடு  ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலய மைதானத்தில் இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த 26.02.2013ன்று  பாடசாலையின் அதிபர் தா.சண்முகதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
 
இவ் விளையாட்டுப் போட்டியில் மூன்று இல்லங்கள்  கலந்து கொண்டன. இதில் முதலாம் இடமாக நெய்தல் இல்லமும், இரண்டாம் இடமாக மருதம் இல்லமும்,  மூன்றாம் இடமாக முல்லை இல்லமும் வெற்றிகளைப் பொற்றுக்கொண்டன.
 
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் S.ஸ்ரீகிருஷ்ணராஜா அவர்களும் கௌரவ அதிதிகளாக கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான  S.குலேந்திரகுமார், T.அனந்தரூபன்,  இவர்களும் மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர்களான N.குணலிங்கம், A.சுகுமாரன், S.பரமேஸ்வரன் அவர்களும் அத்துடன்  கிராம உத்தியோகத்தர், உலக தரிசன உத்தியோகத்தர், வலய உடற்கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் பெற்றோர்கள், பொதுமக்கள் போன்ற பலரும் கலந்து சிறப்பித்தனர்.
 
இந் நிகழ்வின்போது இப் பாடசாலை அதிபரினால் கேட்டுக் கொண்டதற்கிணங்க,  இங்கு உரையாற்றிய  வலயக்கல்விப் பணிப்பாளர், தளபாட வசதிகள் அதிகம் பற்றாக்குறையாக இருக்கும் இப் பாடசாலைக்கு மிக விரைவில் தளபாட வசதிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.




SHARE

Author: verified_user