03 March 2013

வந்தாறுமூலை விஸ்னு வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி2013

SHARE
மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு கடந்த வெள்ளிக்கிழமை (01.03.3013)  அதிபர் எஸ்.மோகன் தலைமையில் நடைபெற்றது.

வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் திறனாய்வில், பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறி கிருஸ்ணராஜா, கௌரவ அதிதியாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக ஏறாவூர் பற்று -2 கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.சுகுமாரன், சுகாதார வைத்திய அதிகாரி ஈ.சிறிநாத், உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி கே.தவராசரெத்தினம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கல்குடா வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுபாஸ்சந்திரனால்  ஒலும்பிக் சுடரேற்றப்பட்டு ஆரம்பமாகிய வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வில், மாணவர்களின் ஓட்டப் போட்டி நிகழ்வுகளும், அஞ்சல் ஓட்டம், உடற் பயிற்சிக் கண்காட்சி, கயிறிழுத்தல், வினோத உடைப் போட்டி, பழைய மாணவர்களுக்கான நிகழ்ச்சி, பெற்றோர், ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.







SHARE

Author: verified_user