08 March 2013

கம்பஹாவில் மினி சூறாவளி

SHARE
கம்பஹாவில் மினி சூறாவளி வீசியுள்ளதுடன் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. இதனால் கம்பஹாவூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


கம்பஹா ஆரெழுவ எனுமிடத்திலேயே மரங்கள் முறிந்து தண்டவாளங்களில் விழுந்துள்ளன. இதனால் ரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் முறிந்து விழுந்துள்ள மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தன.

SHARE

Author: verified_user