16 April 2013

சித்தாண்டி நலன்புரி அமைப்பின் விளையாட்டு விழா நிகழ்வு

SHARE
புதுவருடத்தை முன்னிட்டு சித்தாண்டி நலன்புரி அமைப்பினால் மாபெரும் விளையாட்டு விழா ஒன்று வினாயகர் கிராமம் நாககன்னி ஆலய மைதானத்தில் இன்று (16.04.2013) நடாத்தப்பட்டது. 

அமைப்பின் தலைவர் ஆ.தேவராசா அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களும், சிறப்பு அதிதிகளாக சடமூக சேவைகள் உத்தியோகத்தர் பி.ராஜ்மோகன், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.சிவகுமார் அவர்களும் கலந்துகொண்டனர்.

சித்தாண்டி 01,  மாவடிவேம்பு 02 கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன் , மாவடிவேம்பு 02 இளந்தளிர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சி.திருப்பதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சித்தாண்டி மற்றும் மாவடிவேம்பைச் சேர்ந்த பொதுமக்களும் பங்குபற்றினர்.

இன்று காலை 7.00 மணிக்கு மரதன் ஓட்டத்துடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. பிற்பகல் 2.00 மணியளவில் நாககன்னி அம்மன் ஆலய மைதானத்தில் ஏணைய கலாசார விளையாட்டுக்களும் இடம்பெற்றன.




























SHARE

Author: verified_user