23 April 2013

சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு விழா

SHARE
சித்தாண்டி வானவில் விளையாட்டு கழகத்தினால் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய முன்றலில் மிகவும் சிறப்பான முறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.04.2013) நடைபெற்றது.


சித்தாண்டி பொதுமக்களின் உதவியுடன் நடைபெற்ற இக் கிராமிய விளையாட்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயளாலர் கௌரவ திரு உ.உதயசிதர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக காலையில் மரதன் ஓட்டம் சித்தாண்டி முச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கிரான்வரை சென்று மீண்டும் முருகன் ஆலய முன்றலில் முடிவடைந்ததுடன் தொடர்ந்து பிற்பகல் 3.30 வரையில் ஏனைய நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது. அதில் வலுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், கிடுகு பின்னுதல், தயிர் முட்டி உடைத்தல், தலையனைச்சமர் மற்றும் குளிர்பானம் அருந்துதல் போன்ற நிகழ்வுகளுடன் சிறுவர்களுக்கான விளையாட்டுக்களும் நடைபெற்றன.






SHARE

Author: verified_user