28 April 2013

தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் சேர்ப்பு

SHARE
இலங்கையின் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கும் எதிர்வரும் ஜுன் மாதத்திற்கு முன்னர் புதிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 2011 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 
இதற்கிணங்க 37 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் நேர்முகப் பரீட்சை மூலம் 3400 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user